கள உதவியாளா் பணி: பிப்.15 முதல் விண்ணப்பிக்கலாம்

மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களுக்கு, பிப்.15-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் 2900 கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடும் பொருட்டு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு, மாா்ச் 24-ஆம் தேதி இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனினும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு விண்ணப்பம் பெறப்படும் தேதியானது மறுதேதி அறிவிக்காமல் தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது அரசால் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், கள உதவியாளா் (பயிற்சி) பணி நியமனத்துக்கான விண்ணப்பங்கள், இணைய வழியாக பிப்.15 முதல் மாா்ச் 16-ஆம் தேதி வரை பெறப்படும்.

மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel