பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் பரப்புரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அரக்கோணம் தொகுதி கைனூர் பகுதி தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஈடுபட்டு வருகறார். அதிமுக அரசு மக்களுக்கு செய்த நலத்திட்ட பணிக்கை பட்டியலிட்டு பிராச்சாரம் செய்தார். அதில் 10 முதல் 15 நாட்களில் பயிற்கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்படும் என உறுதியளித்தார்.

பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக நேற்று அரசாணை வெளியிடப்பட்டது என கூறினார். 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் இன்று பயனடைவார்கள் என கூறினார். 12.51 லட்சம் பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது என கூறினார். கொரோனா காலத்தில் இலவச ரேசன் பொருட்கள், நிதியுதவி வழங்கினோம் என பேசினார். மேலும் பொங்கள் பரிசாக ரூ.2500 வழக்கப்பட்டது என தெரிவித்தார். உள்ளாட்சி அமைப்பில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கியுள்ளோம் என தெரிவித்தார்.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel