JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள், 4,775 பேருக்கு, மூன்றாண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு கல்லுாரிகளில், நிரந்தர பணியிடத்தில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், காலமுறை ஊதிய அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.அதேநேரம், கூடுதலாக உருவாக்கப்பட்ட தற்காலிக பணியிடங்களில், 4,775 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்காலிகமாக உள்ள, 4,775 பணியிடங்களை, இன்னும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்க, கல்லுாரி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதற்கான கருத்துரு, உயர் கல்வி முதன்மை செயலருக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், விரைவில் ஒப்புதல் வரும் என்றும், கல்லுாரி கல்வி இயக்குனர் தரப்பில், கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment