JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் போது வழங்கப்படும் என முடிவெடுக்க வேண்டும் என கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பெரியார் திடலில் கீரிப்பள்ளம் ஓடையில் கான்கிரீட் தளம் அமைத்து ரூ.11.5 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியையும் கொடிவெரி அணையில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்கால்கள் கான்கரீட் தளங்கள் அமைத்து ரூ.140 கோடியில் புனரமைக்கும் பணியையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாவட்ட ஆட்சியா கதிரவன் ஆகியோர் பூமிபூஜையுடன் தொடங்கிவைத்தார்கள்.
இவ்விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கீரிப்பள்ளம் ஓடை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளது. இன்றும் மூன்று மாத காலங்களில் பணிகள் முடிவுற்ற பிறகு பார்த்தோமேயானால் அதன் நிறைவுகள் மக்களுக்கு தெரியவரும் என்றும் அதேபோல் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆர்ச் டூ ஆர்ச் வரையிலும் மின் விளக்குள் பொதுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் ஒரு சிட்டியாக மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் சாலையை கடக்கும் இடங்களில் தானியங்கி இயந்திர நடைபாதைகள் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
அதேபோல் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் போதிய அளவு படித்துறைகள் அமைக்கப்படும் தடப்பள்ளி அரக்கன்கோட்டை கரைகளில் விவசசாயிகள் இளைப்பாற கூடாரங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் போது வழங்கப்படும் என தெரிவித்தார்.
நீட், ஜேஇஇ போன்ற தேர்வுக்கான பாடதிட்டங்களை குறைப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் பிப்ரவரியில் பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும், பள்ளியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு என தனியாக ஊதியம் வழங்கப்படுவதில்லை பள்ளி தலைமையாரிசியரிடம் அதற்கான ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment