Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 1, 2021

750 புதிய 'ஏகலைவா' பள்ளிகள்: மத்திய பட்ஜெட் 2021-ல் கல்விக்கான திட்டங்கள்!

2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த தசாப்தத்தின் முதல் பட்ஜெட், டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்படும் முதல் பட்ஜெட் உள்ளிட்ட சிறப்புகளைப் பெற்ற இந்த பட்ஜெட்டில் கல்வி சார்ந்த அறிவிப்புகள்:

கல்வித்துறை:

> 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.

> லே பகுதியில் புதிய மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படவுள்ளது.

> மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள்.

> அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ - மாணவியருக்கு உதவும் வகையில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு. > ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம்.

> தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 50,000 கோடி ஒதுக்கீடு.

விண்வெளித்துறை:

> இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா துவக்கப்படவுள்ளது. இதன் வாயிலாக பிஎஸ்எல்வி சிஎஸ்51 செலுத்து வாகனம் உருவாக்கப்படவுள்ளது.

> 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்வெளி ஓடம் ககன்யான் செலுத்தப்படவுள்ளது.

பிற அறிவிப்புகள்:

> நாட்டின் உள்நாட்டு மொழிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் தொடங்க திட்டம்.

> கணினி துறையில் புதிய முன்னேற்றங்களான டேட்டா அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment