Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 1, 2021

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு..!

12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஊதிய உயர்வின் மூலம் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதிநேர ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.7,700 ஊதியத்திலிருந்து ரூ.10,000 உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இனி வரும் காலங்களில் வாரத்தில் மூன்று நாட்கள் பகுதிநேர ஆசிரியர்கள் பணி புரிவதை உறுதி செய்ய வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களுக்கான பதிவேடு தலைமை ஆசிரியரால் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். வருகைப் பதிவேட்டின் படி பகுதி நேர ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் மூலம் ஊதியம் விடுவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD THE G.O

No comments:

Post a Comment