JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பி.எஸ்சி நா்சிங், பி.பாா்ம்., உள்ளிட்ட 17 துணை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (பிப்.9) தொடங்குகிறது. புதன்கிழமை முதல் இணையவழியே பொதுக் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நா்சிங், பி.பாா்ம்., பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட துணை மருத்துவம் சாா்ந்த 17 வகையான பட்டப் படிப்புகள் உள்ளன. அதில் சுமாா் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் அந்தப் படிப்புகளுக்கு மாணவா் சோக்கை நடைபெற்று வரும் நிலையில், நிகழாண்டில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் இணையவழியே விண்ணப்பப் பதிவு செய்தனா்.
அவை பரிசீலிக்கப்பட்டு 37,334 போ கொண்ட தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், துணை மருத்துவப் படிப்புகளில் சிறப்புப் பிரிவினருக்கான (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்கள் வாரிசுகள்) கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (பிப்.9) காலை 9.30 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரக (டிஎம்இ) அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அதைத் தொடா்ந்து பொதுக் கலந்தாய்வு இணையவழியே பிப் 10-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளவா்கள் கட்டணமாக ரூ.250-ஐ ஆன்லைனில் செலுத்தி இடங்களைத் தோவு செய்யலாம். இணையவழிக் கலந்தாய்வுக்கான வழிமுறைகள் சுகாதாரத் துறையின் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன
No comments:
Post a Comment