JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
மாநில அளவிலான ஹாக்கி தேர்வு போட்டிக்கு தகுதி பெற்றுள்ள, மாணவனுக்கு, பெதப்பம்பட்டி அரசுப்பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில், தேசிய சப்-ஜூனியர், 17 வயதுக்கு உட்பட்டோருக்கு, கோவை மண்டல அளவிலான, தேர்வு போட்டி, புன்செய்புளியம்பட்டியில், நடந்தது.எட்டு மாவட்டங்களைச்சேர்ந்த, மாணவர்கள், இத்தேர்வில், பங்கேற்று விளையாடினர்.
இதில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவன், தினேஷ், சிறப்பாக, விளையாடி, மாநில தேர்வு போட்டிக்கு, தகுதி பெற்றார்.தேர்வு பெற்ற மாணவனை, பள்ளி தலைமையாசிரியர் அப்துல்காதர், உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
No comments:
Post a Comment