Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 8, 2021

அதிரடி திட்டம்! வாக்குச் சாவடிக்கு வராமலேயே வாக்களிக்கலாம்!!

வாக்குச் சாவடிக்கு வராமலேயே வாக்களிப்பதற்கான அம்சங்களை இந்திய தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

இதற்கான தேர்தல் ஆணையம் சென்னை ஐஐடி உடன் கைகோர்த்துள்ளது. இருதரப்பினரும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொழில்நுட்ப ரீதியான வெற்றிகளுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கும் என தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் 100% வாக்குப்பதிவு என்பது எட்டாத கனியாகவே உள்ளது. அதனால் முழு வாக்குப்பதிவை கொண்டு வருவதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அதாவது வாக்குச் சாவடிக்கு வராமல் வாக்கினைப் பதிவு செய்யும் ரிமோட் ஓட்டிங் முறையை தோதல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. இதுபோன்ற வாக்களிப்பு முறையில் ரகசியம் காக்கப்படுவதுடன், அனைத்துத் தரப்பினருக்கும் நம்பகத்தன்மை ஏற்பட வேண்டும்.

அதனால் தேர்தல் ஆணையம், சென்னை ஐஐடி குழுவினருடன் இணைந்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்து நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment