பள்ளிகளில் விரைவில் ஷூ மற்றும் சாக்ஸ் வினியோகம்

அரசுப்பள்ளி, மாணவ, மாணவியருக்கு, முதன்முறையாக, அரசின் விலையில்லா, ஷூ மற்றும் சாக்ஸ் வினியோகிக்க, அந்தந்த வட்டாரங்களில், இருப்பு வைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு, அரசுப்பள்ளிகளில், படிக்கும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலணிகள் வழங்கப்பட்டு வந்தன.

இதில், மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டு, நடப்பாண்டு, அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, ஷூ மற்றும் இரண்டு ஜோடி சாக்ஸ் வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக, சில மாதங்களுக்கு முன் கணக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்டது.கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், விலையில்லா திட்டங்களுக்கான பொருட்கள் வினியோகம் தடைபடாது என, அரசு அறிவித்தது.

அதன்படி, அனைத்து பள்ளிகளுக்கும், தேவையான ஷூ அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, உடுமலை கல்வி மாவட்டத்துக்கு தேவையான, 3 ஆயிரம், ஷூ மற்றும் சாக்ஸ் அனுப்பி, எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதல் வழங்கியதும், வினியோகம் துவங்கும் என, கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel