JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
வருமான வரித்துறை சார்பில், இந்தாண்டுக்கான, டிஜிட்டல் வருமான வரி காலண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது; இது, வரி செலுத்துவோருக்கு, இ-மெயிலில் அனுப்பப்பட்டுள்ளது.
முகப்பு பக்கத்துடன் சேர்த்து, மொத்தம், 13 பக்கங்களுடன், மாத காலண்டராக உருவாக்கப்பட்டுள்ள இதில், ஒவ்வொரு பக்கத்திலும், வரி செலுத்துவதன் அவசியம்; நன்மைகள்; வழிமுறைகளை விளக்கும் வகையில், அழகிய வண்ண கார்ட்டூன் படங்களுடன் கூடிய, வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
வருமான வரி கணக்கு சார்ந்த முக்கிய தேதிகள், வட்டமிடப்பட்டுள்ளன. குடியரசு, சுதந்திர தினம், ஹோலி, ராமநவமி உள்ளிட்ட தினங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. பி.டி.எப்., வடிவில் இதை 'டவுன்லோடு' செய்து பயன்படுத்தலாம்.
வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம்; உதவி எண் விவரங்களும் இடம்பெற்றுள்ளன. http://www2.incometaxindiaefiling.gov.in/microsite9/ITD_CALENDER_2021_final_JANUARY1.pdf என்ற தளத்தில் இருந்து, இதை பதிவிறக்கலாம்.
No comments:
Post a Comment