Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 15, 2021

சிபிஎஸ்இ தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி கால அவகாசம். இதற்கு மேல் அவகாசம் கிடையாது என திட்டவட்டம்!

கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக மூடப்பட்டிருந்தன. வீட்டிலிருந்தபடியே மாணவர்கள் ஆன்லைனில் படித்துவந்தார்கள். பொதுத்தேர்வு நெருங்கிவருவதால் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பாடங்கள் குறைக்கப்பட்டு பொதுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. அதன்படி, சிபிஎஸ்இ 30 விழுக்காடு பாடங்களைக் குறைத்தது. தேர்வு தேதியையும் அறிவித்துவிட்டது. பொதுத்தேர்வு மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 10ஆம் தேதியோடு முடிவடைகிறது.

தற்போது 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுக்குக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”நாடு முழுவதும் 2021ஆம் ஆண்டு நடைபெறும் 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எழுதும் தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தனர். இதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குக் கடைசி முறையாகக் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இதுவரை விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள் பிப்ரவரி 22 – 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் மட்டுமே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும்போது தாமதக் கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டும். இதற்கு மேல் விண்ணப்பிக்கக் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment