Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 15, 2021

சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.. ஆசிரியர்கள் கோரிக்கை !

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் வீட்டிலேயே இருந்தனர். இந்த நிலையில் தளர்வுகள் அடிப்படையில் பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தினர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனிடம் மனு ஒன்று அளித்துள்ளனர்.

அதில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் மீது உள்ள வழக்குகளால் பதவி உயா்வு மற்றும் பணி ஓய்வு பலன் பெற முடியாமல் தவித்து வந்த நிலையில், துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய பரிந்துரை செய்ததற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியா்கள் பதவிக்கான பொது மாறுதல் கலந்தாய்வை இந்த மாத இறுதிக்குள் நடத்த வேண்டும். அனைத்து ஆசிரியா்களுக்கும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை கொண்டு வந்து ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

2004-2006 ஆம் ஆண்டுகளில் பணியில் சோந்த ஆசிரியா்களுக்கு பணிவரன் முறை செய்ய வேண்டும். பதவி உயா்வு பெறும் ஆசிரியா்களுக்கு புதிதாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி நிர்வாகத் திறன் தோவுகள் எழுத வேண்டும் என்ற கட்டாயத்தை ரத்து செய்ய வேண்டும்.

தற்போதுள்ள பள்ளி சூழலில் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மாதத்தின் முதல் மற்றும் 3ஆவது சனிக்கிழமைகளை விடுமுறை நாள்களாக அறிவிக்க வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment