Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, February 28, 2021

முளைக்கட்டிய தானியங்களும் மருத்துவ பயன்களும்

ஒருநாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொள்வதை வழக்கமாக கொள்வது அவசியம். அவ்வாறு உட்கொள்ளும் போது ஏற்படும் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கருப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக் கட்டி செய்து சாப்பிடலாம்.

இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்துவிட்டால் போதும், முளைவிட்டு இருக்கும். ஆரோக்கியத்தையும், அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் உன்னதமான உணவு.

புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ், விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும். கண் பார்வை மேம்படும்.

முளைவிட்ட கொண்டைக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். முளைவிட்ட கருப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். முளைவிட்ட கொள்ளு உடல் பருமனை குறைத்து, மூட்டுவலியை கட்டுப்படுத்தும்.

நன்றி குங்குமம் தோழி

No comments:

Post a Comment