Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 31, 2021

தேர்தல் பணி காரணமாக உடல் தகுதி தேர்வு 21ம் தேதிக்கு மாற்றம்: சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் தகவல்

காவல் துறையில் காலியாக உள்ள 11,813 இடங்களுக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 12ம் தேதி உடல் தகுதி தேர்வு நடைபெற இருந்த நிலையில், திடீரென தேர்தல் பணி காரணமாக வரும் 21ம் தேதிக்கு மாற்றி சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது. தமிழக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 11,813 இடங்களுக்கான எழுத்து தேர்வு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தமிழகம் முழுவதும் 37 மாவட்ட தலைநகரங்களில் நடந்தது.

இந்த தேர்வை 5,50,314 பேர் எழுதினார். எழுத்து தேர்வுக்கான முடிவு கடந்த பிப்ரவரி 19ம் தேதி சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அடுத்த கட்டமாக அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடல் கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடல் திறன் போட்டி நடைபெற உள்ளது. இந்த தேர்வு 1:5 விகிதத்தில் வரும் 12ம் தேதி நடைபெறும் என்று சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் சார்பில அறிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணியை முன்னிட்டு வரும் 21ம் தேதிக்கு உடல் தகுதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு வரும் 5ம் தேதிக்கு மேல் எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவருக்கும் தனியாக எந்தெந்த நாட்களில் உடல் தகுதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்படும் என்று சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment