Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 31, 2021

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்.? இன்று வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு.!!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்தது. பல தடுப்பு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டது.

இதனை மக்கள் முறையாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்தது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 2,342 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,84,094 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,463 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 8,56,548 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 16 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 12,700 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நோய்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து பரவிய நோய்தொற்று, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் ஆலயங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் மூலமாக பரவி உள்ளது.

நோய் பரவலை தடுக்க 2020 மார்ச் 25ல் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது, புத்தாண்டில் மக்களின் இயல்பு வாழ்க்கையை திரும்பினர். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் தூக்கத்திலிருந்து கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்ற விவரம் இன்று வெளியாக உள்ளது.

No comments:

Post a Comment