Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 15, 2021

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் நிறைவு

மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக் கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று நிறைவடைகிறது.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் இடங்கள் உள்ளன. தேசிய தகுதி, நுழைவுத் தேர்வில் (நீட்) தகுதி பெறுவர்களைக் கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன.

2021-22-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 255 நகரங்களில் ஏப்ரல் 18-ம்தேதி நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது https://nbe.edu.in மற்றும் https://www.natboard.edu.in ஆகிய இணையதளங்களில் கடந்த மாதம் 23-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. எம்பிபிஎஸ் படித்து முடித்த மருத்துவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், இத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான அவகாசம் இன்று நிறைவடைகிறது. இன்று நள்ளிரவு 11.55 மணி வரை விண் ணப்பிக்கலாம். ஏப்ரல் 12-ம் தேதி இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும். நீட் தேர்வு முடிவுகள் மே 31-ம் தேதி வெளியிடப்படும்.

முதலில் விண்ணப்பிப்பவர் களுக்கே அவர்கள் கேட்கும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வு மையங்கள் நிரம்பிவிட்டால், வேறு தேர்வு மையம் ஒதுக்கப்படும் என்று நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment