தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில், வாக்களிக்க வருபவர்கள் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று தெரிவித்தார்.
வழக்கத்தை விட, இந்த சட்டசபை தேர்தலில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளும் இந்த தேர்தலில் வாக்களிக்கலாம்.
பிபிஇ கிட் அணிந்து வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் தேர்தலில் வாக்களிக்கலாம். அவர்கள், பிபிஇ கிட் அணிந்துக் கொண்டு வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம் என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சத்யபிர்தா சாகு, தேர்தல் நடவடிக்கையாக தமிழகத்தில் நேற்று வரையில், சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்..
Thursday, March 4, 2021
மாஸ்க் அணிந்தால் தான் வாக்களிக்க முடியும்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
Tags
ELECTION NEWS
ELECTION NEWS
Tags
ELECTION NEWS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment