Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 29, 2021

கண் பார்வை, செரிமான சக்தி பூசணியில் இவ்வளவு பயன்களா?

தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்த பூசணிக்காய், ஏராளமான பயன்களை வழங்கி வருகிறது. ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, ஜிங்க் போன்ற அத்தியாவசிய சத்துகளைக் கொண்டுள்ளதோடு, நமது உடலின் நோய் எதிர்ப்பு திறனையும் தூண்டுகிறது.

100 கிராம் பூசணியில் வெறும் 26 கலோரிகளே உள்ளதால், எடைக் குறைப்புக்கான முக்கிய ஆதாரமாக விளங்கிறது. பூசணியில், வைட்டமின் ஏ செரிந்துள்ளதால் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும், பூசணியை நேரடியாக சருமத்தில் பூசி வர, ஆரோக்கியமான மற்றும் இளமையான சருமப் பொலிவையும் பெறலாம்.

பூசணியில், ஆண்டி ஆக்ஸிடண்டுகள் அதிக அளவில் உள்ளதால், சுவாச நோய்களான இருமல், சளி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு, ஆஸ்துமாவின் தாக்கத்தையும் குறைக்க உதவுகிறது.

பூசணியில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் உள்ளதால், இதய செயல்பாடுகளை தூண்டுகிறது. இதனால், இதய நோய்கள் வருவதை தடுக்கலாம். மேலும், இரத்த சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்துவதோடு, வளர்ச்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்கிறது.

பூசணியில் உள்ள வைட்டமின் ஏ, கண்ணின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதோடு கருவிழிகளையும் பாதுகாக்கிறது.

பூசணியில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுவதால், செரிமானத்தை ஊக்குவிப்பதோடு மலச்சிக்கலையும் தவிர்க்கிறது.

No comments:

Post a Comment