கடன்களைத் தீர்க்கும் செவ்வாய்கிழமை. காரணம் என்ன தெரியுமா?.!!! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Sunday, April 4, 2021

கடன்களைத் தீர்க்கும் செவ்வாய்கிழமை. காரணம் என்ன தெரியுமா?.!!!

தீராத கடன் தொல்லையிலிருந்து விடுபட செவ்வாய்க்கிழமை ஏற்றது என ஜோதிடர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

ஒருசிலர் தீராத கடன் தொல்லைகளால் சிரமப்பட்டு வருவர். இவர்கள் பாடுபட்டு கடனை அடைத்தாலும், மேலும் மேலும் கடன் வாங்கும் சூழ்நிலை இவர்களுக்கு ஏற்படும். இப்படி தீராத கடன் தொல்லையில் இருந்து விடுபட செவ்வாய்க்கிழமை ஏற்றது என ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, கடன், நோய் மற்றும் வழக்கு இவற்றை அடைக்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும். இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும்.

அதே போல் நோய் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் வைத்தியம் பார்த்தால் விரைவில் நோய் குணமாகும். வழக்கு உள்ளவர்களும், இதேபோல, செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் அதற்கு தீர்வுகாண முயன்றால் நமக்கு ஜெயம் உண்டாகும். அதேசமயம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால் மென்மேலும் கடன் பெருகும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad