Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 21, 2021

TNPSC - தேர்வுகளின் விடைத்தாள் பெற புதிய வசதி!

போட்டி தேர்வுகளின் விடைத்தாள் நகல்கள், 'ஆன்லைன்' வழியாக தேர்வர்களுக்கு வழங்கப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., என்ற, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், தேர்வுகளின் நடவடிக்கைகள் முடிந்ததும், தேர்வர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை, இணையதளம் வழியே உரிய கட்டணம் செலுத்தி, பெற்றுக் கொள்ளும் வசதி அமல்படுத்தப் பட உள்ளது.

இதன் முதல் கட்டமாக, 2019 மார்ச்சில் நடந்த, 'குரூப் - 1' முதல் நிலை தேர்வு, அதே பதவிகளுக்கு, 2019 ஜூலையில் நடந்த முதன்மை தேர்வு ஆகியவற்றின் விடைத்தாள் நகல்கள், இன்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.தேர்வாணைய வரலாற்றில், இணையதளத்தில், தேர்வர்களின் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்வது இதுவே முதல் முறை.தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அவரவர் ஒருமுறை பதிவு வழியே, கட்டணம் செலுத்தி விடைத்தாள்களை உடனே பதிவிறக்கம் செய்யலாம்

'குரூப் - 1' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள், அவர்களின் புகைப்படங்களுடன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட போது, தேர்வர்கள் வரவேற்றனர்.இதன்படி, 2020 ஜன.,க்கு பின் தேர்வு நடவடிக்கைகள் முற்றிலும் முடிந்த தேர்வுகளின் விடைத்தாள்கள், படிப்படியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment