Sunday, May 16, 2021

தொட்டது துலங்க வேண்டுமா... இதோ 5 எளிய பரிகாரங்கள்!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

ஒரு சிலர் தொடங்கும் செயல்கள் அனைத்துமே சுபமாக லாபமாக சிறப்பாக நிகழும். அப்படிப்பட்டவர்களைக் கைராசிக்காரர்கள் என்று சொல்வதுண்டு. அவ்வாறு திகழ வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். ஆனால் பலருக்கும் அவ்வாறு நிகழ்வதில்லை. ஏதேனும் தடைகள் ஏற்பட்டுப் பாதியிலேயே செயல்கள் நிற்கும் நிலை ஏற்படும்.

வாழ்வியல் ரீதியாகப் பார்த்தால், இவ்வாறு தொட்டது துலங்கும் கைராசிக்காரர்கள் எனப்படுபவர்கள் ரொம்ப சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் என ஒரு கூட்டமே உதவக்கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களும் தனிப்பட்ட முறையில் நேர்மறை சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள், எடுத்த காரியத்தை செவ்வனே முடிப்பார்கள்தானே.

ஜோதிடம், அவர்களை சுக்ர யோகம் கொண்டவர்கள் என்று சொல்கிறது. சுக்ர யோகம் அல்லது சுக்கிரனின் அனுக்கிரகம் இருந்தால் தொடங்கும் செயல்கள் வெற்றியாகும் என்கிறது ஜோதிடம். அனைவரும் சுக்கிரனின் அனுக்கிரகத்தைப் பெற எளிய சில பரிகாரங்களையும் பரிந்துரைக்கிறது ஜோதிடம். இதுகுறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

மேஷம்

தெளிவு : முக்கியமான விஷயங்களிலிருந்த குழப்பம் இன்று நீங்கும். குடும்ப உறவுகள் அனுகூலமாக இருப்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு. - ஆல் தி பெஸ்ட்!

ரிஷபம்

நிதானம் : இன்று சொல்லிலும் செயலிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

மிதுனம்

மகிழ்ச்சி : இன்று மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்திலிருந்த தேவையற்ற மனவருத்தங்கள் நீங்கும். - என்ஜாய் தி டே!

கடகம்

ஆலோசனை : இன்று செலவுகள் அதிகரிக்கும். பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். - திறமைக்கு மரியாதை!

சிம்மம்

அனுகூலம் : முயற்சிகள் அனுகூலமாகும். நண்பர்கள் உதவுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே விட்டுக்கொடுத்துப் போவது நன்மை பயக்கும். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

கன்னி

உற்சாகம் : முற்பகலில் சோர்வும் பிரச்னைகளும் பிற்பகலில் உற்சாகமும் ஏற்படும் நாள். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எதிர்பாராத பண உதவியும் கிடைக்கும். - ஆல் இஸ் வெல்!

துலாம்:

பணவரவு : பணவரவிலிருந்த சிக்கல்கள் நீங்கும். புதிய முயற்சிகளை உற்சாகமாகச் செய்வீர்கள். காரியங்கள் அனுகூலமாக முடியும். செலவுகளில் மட்டும் சிக்கனம் தேவை. - செலவே சமாளி!

விருச்சிகம்

குழப்பம் : சந்திராஷ்டமம் இன்றும் தொடர்வதால் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். யாரோடும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். இறைவழிபாடு தேவை. - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

தனுசு:

உதவி : எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். வீட்டிலும் வெளியிலும் நற்பெயர் உண்டாகும். குடும்பத்தினரின் தேவைகளை விரைந்து நிறைவேற்றுவீர்கள். - ஜாலி டே

மகரம்

ஆதாயம் : குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத பணவரவும் மகிழ்ச்சி தரும். - இனி எல்லாம் சுபமே!

கும்பம்

அனுகூலம் : செயல்கள் அனைத்தும் அனுகூலமாகும். எதிர்பார்த்த செய்தியும் பணமும் கைக்குவரும். என்றபோதும் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். - ஹெல்த் இஸ் வெல்த்!

மீனம்

விவாதம் : குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ள நாள். பொறுமையோடு அணுக வேண்டியது அவசியம். - நோ ஆர்கியுமென்ட்ஸ்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

கல்விச் செய்திகள்

Featured News