Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 17, 2021

கோவாக்சின் தடுப்பூசி உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை அழிக்கும் திறன் கொண்டது: ஆய்வு முடிவில் தகவல்

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. எனினும் கொரோனா வைரசானது தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படுகிறது.

அவ்வகையில் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியானது இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் உட்பட பல வகையான உருமாற்றம் அடைந்த கொரோனாவுக்கு எதிராக நன்கு செயல்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியிருந்தது.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆய்வு இதழில், கோவாக்சின் தடுப்பூசி மருந்து குறித்த ஆய்வுக்கட்டுரை வெளியாகி உள்ளது. அதில், கோவாக்சின் தடுப்பூசியானது, இந்தியாவிலும் பிரிட்டனிலும் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட இரட்டை மாறுபாடு கொண்ட பி.1.617 மற்றும் பி.1.1.7 உள்ளிட்ட அனைத்து முக்கிய வளர்ந்து வரும் கொரோனா வகைகளையும் அழிக்கும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment