Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 22, 2021

வீடுகளில் மின் கணக்கீடு - யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம்: தெளிவான விளக்கம்

மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி,எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக மதிப்பிட்டு,அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி,பின்னர் மின் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும் என்றும்,பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் சந்தேகம் இருந்தால் மீண்டும் மின் வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும்,தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும்,அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும், அதற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால், அதற்கேற்ப மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அந்த வகையில்,எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய தெளிவான விளக்கம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி,மின்கட்டண விபரம் பின்வருமாறு:
100 யூனிட் வரை- கட்டணம் இல்லை,
110 யூனிட்க்கு - ரூ.35
200 யூனிட்க்கு - ரூ.170
210 யூனிட்க்கு - ரூ.260
290 யூனிட்க்கு -ரூ.500
390 யூனிட்க்கு-ரூ. 800
500 யூனிட்க்கு- ரூ.1130
510 யூனிட்க்கு- ரூ.1846
600 யூனிட்க்கு-ரூ.2440
700 யூனிட்க்கு-ரூ.3100
800 யூனிட்க்கு-ரூ.3760
1000 யூனிட்க்கு-ரூ.5080
1200 யூனிட்க்கு-ரூ.6400

என்ற முறையில் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment