Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 20, 2021

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!

தமிழக அரசின் கவனத்திற்கு தெரிவிக்கும் வகையில் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கூட்டம் இன்று (18/05/2021 - செவ்வாய்க்கிழமை) மாலை காணொளி வாயிலாக நேரலையில் கூகுள் செயலின் வழியாக நடைபெற்றது.

அந்தக்கூட்டடத்தில் எடுக்கப்பட்ட கருத்து அடிப்படையில் கீழ்காணும் 4 முக்கிய கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கையாக வைத்துள்ளார்கள் :

1.பல்கலைக்கழக மானிய விதிகளின்படி ஒவ்வொரு மாநிலத்தில் தனியார் கல்லூரிகளில் பணியாற்ற கூடிய பேராசிரியருக்கும் மாத ஊதியம் குறைந்தபட்சம் 40 ஆயிரம் வழங்க வேண்டும்.

2. கடந்த அதிமுக ஆட்சியில் அரசாணை எண் 35, 56, ஆகியவற்றை உடனடியாக நீக்கி, நடைபெற்றுள்ள ஊழல்களை கட்டாயம் மாண்புமிகு தமிழக அரசு, உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அந்த உயர்கல்வித்துறை ஊழல்களை வெளியில் கொண்டு வரவேண்டும்.

3. கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களை கல்வித்தகுதி பணி அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தனியார் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு உடனடியாக நேர்காணல் நடத்தவும், இனிவரும் காலங்களில் முறையாக நேர்காணல் நடத்தி பணிவாய்ப்பினை வழங்குமாறும் இதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழக அரசிற்கு மின்னஞ்சல் வழியாகவும், மனித உரிமை ஆணையத்திற்கு மின்னஞ்சல் வழியாகவும், பதிவஞ்சல் வழியாகவும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் நேரில் இந்த கோரிக்கையை முன் வைப்பதாகவும் அனைத்து தனியார் கல்லூரி ஆசிரியர்கள் முடிவு எடுத்துள்ளார்கள். தமது பகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இடமும் இந்தக்கடிதங்களை வழங்குவதாக முடிவெடுத்துள்ளனர்.

இத்தகவலை சென்னை மாவட்டதனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தயைகூர்ந்து செய்தி வெளியிட்டு உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

1 comment:

  1. You are expecting 40000 per month. At the same time , you are targeting Guest Lecturers who are getting 20000 per month . Actually what is your motto. Don't spoil the life of others for your personal problem.

    ReplyDelete