JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் மே மாதம் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த ஊரடங்கு நாளை மறுநாள் உடன் நிறைவடைகிறது.
இதனிடையே, தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பது குறித்த மருத்துவ நிபுணர்களுடன் நாளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை அடிப்படையில் ஊரடங்கு நீடிப்பது குறித்து தமிழக அரசு அறிவிக்கையுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோய் தொற்று குறையாத நிலையில் தமிழக அரசு திட்டம் என கூறப்படுகிறது. மருத்துவ குழுவினர் உடனான முதல்வரின் ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment