JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " மறுதேர்வு எழுத விரும்பும் பொறியியல் மாணவர்கள் வரும் 24 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். கடந்த நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வானது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த பிப்ரவரி - மார்ச் மாதத்தில் இணையதளம் வழியாக நடைபெற்றது.
பிப்ரவரி - மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்வில், பெரும்பாலானோருக்கு தேர்வு முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை. இதனால் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மட்டும் 24 ஆம் தேதி முதல் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இந்த தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். மாணவர்கள் அனைவரும் தேர்வுக்காக தயாராக இருக்க வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment