Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, June 3, 2021

இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ2000/- மற்றும் மளிகைப்பொருட்கள் தொகுப்பு !

தமிழகத்தில் கொரோனா அலை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என அறிவித்தார்.

மே மாதம் கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதன் 2வது கட்டமாக மேலும் 2000 ரூபாய் இன்று முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மக்களின் சிரமங்களை மேலும் குறைக்கும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் 13 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்புகளும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அந்தத் தொகுப்பில் கோதுமை, ரவை, சர்க்கரை, உப்பு, புளி, மஞ்சள் தூள், கடுகு, பருப்பு, சீரகம், குளியல் சோப், சலவை சோப் உட்பட 13 பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 13 வகையான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக டெண்டர் விடப்பட்டிருந்தது.

இவர்களிடம் மொத்தமாக கொள்முதல் செய்து நிவாரணப் பொருட்களை பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட இருக்கிறது. இதனை பெற ஜூன் 1 நேற்று முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் 13 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். இதேபோல் 2ஆம் தவணை கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment