JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பொறியியல் மாணவா்களுக்கான மறுதேர்வு அட்டவணை வெளியீடு
பொறியியல் மாணவா்களுக்கு மறுதேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கல்லூரிகள் மூடப்பட்டு, மாணவா்களுக்கு இணையதள வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பொறியியல் படிப்புகளுக்கான நவம்பா்-டிசம்பா் பருவத் தேர்வுகள் சற்று காலதாமதமாக பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் இணையதள வழியில் நடத்தப்பட்டன. இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.
இதையடுத்து பிப்ரவரி மாதத்தில் தேர்வெழுதிய மாணவா்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று உயா்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி பொறியியல் படிப்புக்கான மறுதேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலை. கடந்தவாரம் வெளியிட்டது. அதில், மறுத்தேர்வானது வழக்கமான பேப்பா்-பேனா முறையில் நடத்தப்படும் என்பன உட்பட தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
அதைத்தொடா்ந்து மறு பருவத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அதில், இளநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் ஜூன் 21 முதல் ஜூலை 28-ஆம் தேதி வரையும்,
முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் ஜூன் 24-இல் தொடங்கி ஜூலை 20-ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment