Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, June 11, 2021

ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது

அடுத்த ஆண்டு ஜன.,1 முதல், ஏ.டி.எம்., மையங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. தற்போது ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அதே வங்கியின் ஏ.டி.எம்., வாயிலாக, மாதம், ஐந்து முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும், பணப் பரிவர்த்தனைகளை கட்டணமின்றி மேற்கொள்ளலாம். இதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஜன.,1 முதல், தற்போதுள்ள இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும்  ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 21 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. வங்கிகள் இடையிலான, ஏ.டி.எம்., நிதிப் பரிவர்த்தனை கட்டணம், 15 ரூபாயில் இருந்து, 17 ரூபாய்; நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.


No comments:

Post a Comment