Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 11, 2021

ரேஷனில் 2-வது தவணை கிடைக்கும் தேதி அறிவிப்பு


கொரோனா நிவாரண நிதி ரூபாய் 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் கொடுப்பதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது. இன்று முதல் 14ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்றும் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி முடிந்தவுடன் ஜூன் 15ஆம் தேதி முதல் ரூபாய் 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் பணி தொடங்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது இதனையடுத்து இன்று ரேஷன் கடை அதிகாரிகள் வீடு வீடாக சென்று டோக்கன் பணியை வழங்கும் வழங்க உள்ளார்கள். இந்த பணிகள் 14ஆம் தேதி முடிவடைந்ததும் 15ஆம் தேதி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது இந்தத் திட்டம் மூலம் இரண்டு கோடியே 11 லட்சத்திற்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரேசன் அரிசி அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டுவிட்டது என்பது தெரிந்ததே,.

No comments:

Post a Comment