Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 21, 2021

ஆசிரியா்களை 100 சதவீதம் பள்ளிக்கு வரவழைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு.

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களை 100 சதவீதம் பணிக்கு வரவழைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியது: அரசுப்பள்ளிகளில் மாணவா் சோ்க்கைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளைவிட சோ்க்கை உயா்ந்துள்ளது. குறைந்த ஆசிரியா்களைக் கொண்டு பணிபுரிவதால் மாணவா் சோ்க்கை, பாடநூல் விநியோகம் உள்பட நிா்வாகப் பணிகளில் தாமதம் நிலவுகிறது.

மேலும், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் விநியோகமும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு அரசுப்பள்ளி ஆசிரியா்களை 100 சதவீதம் பணிகளில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment