Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 21, 2021

தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்க மாதம்தோறும் ரூபாய் 2000 உதவித்தொகை

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்குச் சிறப்பு உதவித்தொகையாக மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2020 - 21ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை, முதுஅறிவியல் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

விருப்பமுள்ளவர்கள் தமிழ், வரலாறு மற்றும் தொல்லியல், மொழியியல், மெய்யியல், முதுநிலை நிகழ்த்துக்கலை, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பு (தமிழ், வரலாறு), முதுநிலைப் பட்டயம், சான்றிதழ் மற்றும் ஆய்வியல் நிறைஞா் (எம்.ஃபில்) பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.

இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளராகப் பொறுப்பு வகிக்கும் திரு கு.சின்னப்பன் கூறுகையில், “மேல்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்தவர்கள் ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஐந்தாண்டு முதுகலைப் படிப்பில் சோ்ந்து படிக்கும் மாணவா்கள், தாங்கள் விரும்பினால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இளநிலைப் பட்டம் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்ப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பயிலும் மாணவா்கள் 20 பேருக்கும் ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் (ஐந்தாண்டு) படிக்கும் மாணவா்கள் 25 பேருக்கும் தமிழக அரசு உதவியுடன் மாதந்தோறும் ரூ.2,000 சிறப்பு உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. மதிப்பெண்கள் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்,” எனத் தெரிவித்தார்.

இந்தக் கல்வியாண்டில் இருந்து இணையம் வழியாகவும் மாணவர் சோ்க்கை நடைபெறுகிறது.

பல்கலைக்கழக இணையத்தளம் (www.tamiluniversity.ac.in) வாயிலாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்பலாம். அத்துடன், விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, உரிய விவரங்களைக் குறிப்பிட்டு, அஞ்சல் வழியாகவும் அனுப்பலாம் என்று திரு சின்னப்பன் கூறினார்.

No comments:

Post a Comment