JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 2020-21 கல்வி ஆண்டில் படித்த 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் தேர்வு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது ஆனால், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைய செய்யப்பட்டனர்.
மேலும், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்கான வழிகாட்டு குழுவும் நியமிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து மதிப்பெண் வழங்குவது குறித்த அறிக்கையை ஜூன் 25ஆம் தேதி முதலமைச்சரிடம் அந்த குழு வழங்கியது. அதில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களுடைய சராசரி மதிப்பெண்ணில் 50 விழுக்காடு, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இருந்து 20விழுக்காடு மதிப்பெண், 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு, அக மதிப்பீட்டில் இருந்து 30 விழுக்காடு மதிப்பெண் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து 12ம் வகுப்புமதிப்பெண் கணக்கிடும் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 19-ம் தேதி காலை 11 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் காலை 11 மணி முதல் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Thirumoorthi 308781
ReplyDelete