JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நடப்பு கல்வியாண்டிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், சி.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் பாடக்குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கடந்த ஆண்டை போலவே 30 சதவீதம் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறை இந்த ஆண்டும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டங்கள் ஏற்கனவே இரண்டு பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்களும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment