Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 13, 2021

தமிழகத்தில் விரைவில் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதற்கான நிகழ்ச்சி அட்டவணை பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் தனியார் பள்ளிகள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வரிடமும் மனு வழங்கப்பட்டுள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ கூறுகையில், தமிழகத்தில் விரைவாக பள்ளிகள் திறக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு முழுமையான அளவு வகுப்புகள் நடத்த முடிவதில்லை. எனவே முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும் டிசி இல்லாமல் எந்தவித பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது எனவும் கட்டணம் செலுத்தாமல் படித்துவிட்டு வேறு பள்ளியில் இருந்து மாணவர்கள் வருவதால் நிர்வாகம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அனைத்து மாநில அரசுகளும் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும், தமிழகத்திலும் விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment