Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, July 25, 2021

ஆசிரியர்களுக்கு நாளை முதல் கணினி பயிற்சி..

சென்னை-தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பளளி ஆசிரியர்களுக்கான, இணையதள வழி அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு, நாளை முதல் துவங்க உள்ளது.

ஹைடெக்' ஆய்வகங்கள் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை, சிறந்த முறையில் மேற்கொள்ள, அடிப்படை கம்ப்யூட்டரை கையாளுதல், இணையதளத்தை மேம்படுத்துதல், 'ஹைடெக்' ஆய்வகங்கள் ஆகியவற்றில், திறன் வளர் பயிற்சி அளிக்க, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பயிற்சிக்கு தேவையான வீடியோக்கள், மதிப்பீட்டு வினாக்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இவற்றை வைத்து, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியே, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.'கியூஆர்' குறியீடுமாநில கருத்தாளர்களை வைத்து தேர்வு செய்யப்பட்ட, 432 மாவட்ட கருத்தாளர்களுக்கு, நாளை முதல் 30ம் தேதி வரை, ஐந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

அடுத்த கட்டமாக, மாவட்ட கருத்தாளர்களாக பயிற்சி எடுத்தவர்களை வைத்து, 2.10 லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆக., 2 முதல் பல்வேறு கட்டங்களில், ஐந்து நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.இப்பயிற்சியால், ஆசிரியர்கள் புதிய தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வர். 

புத்தகத்தில் உள்ள, 'கியூஆர்' குறியீடுகளில் உள்ள எண்ம வளங்களை பயன்படுத்தி கற்பித்தல், இணையதளத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி, பாடக் கருத்துகளை எளிதாக விளக்குதல் போன்றவற்றில் திறனடைவர்.

No comments:

Post a Comment