Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, July 26, 2021

பொதுத்தேர்வுக்கு பாடம் குறைப்பு குறித்து ஆலோசித்து முடிவு: அமைச்சர் தகவல்

ஆசிரியர்களுக்கு 5 நாள்களுக்கான இணைய வழி அடிப்படைப் பயிற்சி வகுப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடக்கி வைத்தார்.

கரோனா பெருந்தொற்று காரணமாக ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆன்லைன் கற்றல் முறை செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் 5 நாள்களுக்கு இணைய வழி பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்கான இந்த பயிற்சியை இன்று தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

இணையதள கணினி வழி அடிப்படைப் பயிற்சி வகுப்பு ஆசிரியர்களுக்கு 5 நாள்களுக்கு ஆசிரியர்களுக்கு நடத்தப்படும். இதன்மூலமாக மாணவர்களுக்கு நவீன மேம்பட்ட முறையில் கற்றலை வழங்க முடியும்.

இதுவரை 2,04,300 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். 75,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்கு பாடத்திட்டம் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

கல்வி தொலைக்காட்சி தவிர்த்து மற்ற ஏதேனும் வழிகளில் மாணவர்களை சென்றடைய முடியுமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருடன் ஆலோசிக்கவுள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment