JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
உதவிப் பொறியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய புதிதாக அறிவிப்பு வெளியிட மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
தமிழக மின்வாரியத்தில் கள உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன.இதையடுத்து, 1,300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர், 600 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்தவர்களை தேர்வு செய்ய, 2020-ம் ஆண்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதற்குள் கரோனா தொற்று முதல் மற்றும் 2-ம் அலை பரவியதால், இப்பணிகளுக்கு இதுவரை தேர்வு நடத்தப்படவில்லை.
இதற்கிடையே, 2,900 கள உதவியாளர் பணியிடத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக, இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால், தேர்வு நடத்தப்படவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், பழைய தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, பணியாளர்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment