JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பாக மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 4,600-க்கும் மேற் பட்ட நூலகங்கள் உள்ளன. நூலகங்களை அடுத்தக் கட்டத் துக்கு கொண்டு செல்லவும், மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழகத்தில் நிச்சயமாக வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும். இதற்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.. பள்ளிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகளை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால் ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
முன்னதாக ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு பணிகள் முடிக்கப்பட்டவுடன், முதலமைச்சருடன் ஆலோசித்து கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 37,579-க்கு மேல் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இதனால் பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியர் தேவை போன்ற விவரங்கள் மாவட்ட கல்வி அலுவலரிடம் சேகரிக்கும் பணிகள் தொடங்கப்படும்" என்றார்.
No comments:
Post a Comment