Tuesday, September 14, 2021

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆலோசனை.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகின்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்பு.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா மற்றும் மாவட்ட பள்ளி கல்வி துறை அதிகாரிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு.

மேலும் தமிழகத்தில் முதலில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த சிறப்பு பேட்டி:

பள்ளிகள்தோறும் மருத்துவ குழு சென்று மாணவர்கள் உடல்நிலை குறித்து சோதனை செய்ய ஏற்பாடு.

பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை குறித்து ஆலோசித்தோம்.

எல்லையோர மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் குறித்து ஆலோசித்தோம் எல்லையோர மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் குறித்து ஆலோசித்தோம்.

மாணவர்களின் நலன் முக்கியம் என்பதையும் கருத்தில் கொண்டு உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

பள்ளி திறப்புகள் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிடுவார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பமில்லை என்றால் வீட்டிலேயே இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News