Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 14, 2021

100 சைனிக் பள்ளிகளைத் திறக்க முடிவு.

சைனிக் பள்ளிகள் சமூகம், மத்திய அரசு ஆகியவற்றுடன் இணைந்து தனியார்கள் 100 சைனிக் பள்ளிகளைத் தொடங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ஏற்கெனவே இருக்கும் சைனிக் பள்ளிகளில் இருந்து புதிதாகத் தொடங்கப்படும் பள்ளிகள் தனித்தன்மையுடன் வேறுபட்டு செயல்படும். முதல் கட்டமாக தனியார், என்ஜிஓ அல்லது மாநில அரசுகள் ஆகியவற்றுடன் இணைந்து 100 சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும்.

புதிய கல்விக்கொள்கையின்படி, குழந்தைகளுக்கு கலாச்சாரத்தின் பெருமையை வளர்க்கவும், தேசத்தின் பாரம்பரியத்தை காக்கவும், தலைமைப் பண்பை உருவாக்கவும்,ஒழுக்கம், தேசபக்தி ஆகியவற்றை வளர்க்கும் மதிப்பு அடிப்படையிலான கல்வியை வழங்க ஆர்வம் காட்டப்படும்.

நாடுமுவதும் பரவலாக மக்களுக்கு சென்றடையும் வகையில் குறைந்த செலவில் பயிலும் வகையில் இந்தப் பள்ளிகளில் கல்வி அமையும். மாணவர்களுக்கு திறன்வாய்ந்த உடற்பயிற்சி, சமூகத்தில் பழகுதல், ஆன்மீகப் பயிற்சி, மனவலிமைப் பயிற்சி, அறிவார்ந்த பயிற்சிகள் போன்றவை இந்த பள்ளிகளில் வழங்கப்படும்

2022-23ம் ஆண்டில் தொடங்கப்படும் 100 சைனிக் பள்ளிகளில் 6ம் வகுப்பில் 5ஆயிரம் மாணவர்கள் வரை அனுமதிக்கப்படலாம். தற்போது 33 சைனிக் பள்ளிகளில் 6-ம் வகுப்பில் 3 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆதலால், விருப்பமுள்ள தனியார் அமைப்புகள், தனியார் பள்ளிகள், மாநில அரசுகள், என்ஜிஓ ஆகியவை சைனிக் பள்ளிகள்சமூகத்துடன் இணைந்து பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment