Wednesday, January 5, 2022

1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை & 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி



1 ) மழலையர் காப்பகங்கள் ( Creche ) தவிர , மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் ( Play Schools ) , நர்சரிப் பள்ளிகள் ( LKG , UKG ) செயல்பட அனுமதி இல்லை.

2 ) அனைத்துப் பள்ளிகளிலும் , 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

3 ) பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.

4 ) அரசு , தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள் , தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.

5 ) பயிற்சி நிலையங்கள் ( Training and Coaching Centres ) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

மேலும் பல புதிய கட்டுப்பாடுகள்...

TN GOV Press News 5.8.2022 - Download here

⭕தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!

⭕இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என அறிவிப்பு.

⭕நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

⭕அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி.

⭕ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

⭕1 முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

⭕பொதுத்தேர்வு எழுதுவோரின் எதிர்கால நலன் கருதி, 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்.

⭕கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுப்பு (Study Leave).

⭕பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை.

⭕அரசு, தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் பொங்கல், கலை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும்.

⭕பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.

⭕வழிபாட்டுதலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனுமதி இல்லை.

⭕அனைத்து கடற்கரைகளிலும் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

கல்விச் செய்திகள்

Featured News