Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 14, 2022

12 - 14 வயதுடைய சிறார்களுக்கு வருகிற 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் - மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் 12 - 14 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாளை மறுநாள் முதல் (வருகிற 16-ஆம் தேதி) தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதிதான் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஓராண்டாக 18 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி 3ம் தேதி முதல் 15 - 18 வயதுடையோருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அதேபோல் முன்களப் பணியாளர்களுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸும் ஜனவரி 10 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2.12 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாகவே 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி திட்டம் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் தொடங்குகிறது என தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்தியாவில் 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் ( மார்ச் 16ம் தேதி ) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாராத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும், மார்ச் 16 முதல் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment