Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 31, 2022

தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு.. அரசு தேர்வுத்துறை போட்ட அதிரடி உத்தரவு..!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்வில் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்தே விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. விடைத்தாள்கள் திருத்தும் முகாம்களில் மதிப்பெண் சரிபார்ப்பு பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் ஒரு சில முகாம்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து தற்போது 2022-2023 ஆம் கல்வியாண்டு வருகின்ற ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை தயார்படுத்தும் பணிகளை செய்யவேண்டிய நிலையில் இருப்பதால் விடைத்தாள்கள் திருத்தும் முகாம்களிலிருந்து தலைமை ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்கும்படி அரசு தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment