Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 31, 2022

இந்த மூன்று ஜூஸை தினமும் குடித்தால் தைராய்டு குணமாகும்

நீங்கள் தைராய்டை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், உங்கள் உணவில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும், அப்போதுதான் இந்த நோயை எதிர்த்துப் போராட நம்மால் முடியும்.

இதுபோன்ற சில பழச்சாறுகளை குடிப்பதன் மூலம் தைராய்டை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதில் சுரைக்காய் சாறும் அடங்கும். எனவே எந்த ஜூஸ் குடிப்பதான் மூலம் தைராய்டை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பதை இங்கே விரிவாக காண்போம்.

தைராய்டு எடை அதிகரிப்பை ஏற்படுத்துகிறது

தைராய்டு உடல் எடையை அதிகரிக்கும். பெரும்பாலான மக்கள் தைராய்டை கட்டுப்படுத்த சில மருந்துகளை எடுதுகொள்கின்றனர். அதேசமயம் சிலர் தங்களின் உணவூ பழக்கத்தை மாற்றுவதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்துகிறார்கள். அதன்படி தைராய்டை கட்டுபடுத்த நாம் சுரைக்காய் சாறு குடிக்கலாம். இது மிகவும் நன்மை பயக்கும். எனவே உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால், நீங்கள் கண்டிப்பாக உங்கள் உணவில் சுரைக்காய் சாற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். இதை குடிப்பதன் மூலம் தைராய்டு கட்டுப்படும் என்று நம்பப்படுகிறது.

தைராய்டு அறிகுறிகள்

தைராய்டு சுரப்பு அதிகமானால் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருப்பதோடு, உடல் எடை குறையும். பிறகு செயல்பாடுகள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாத நிலை இதில் ஏற்படும். அதேநேரத்தில் தைராய்டு குறைவாக சுரக்கும்போது திடீரென உடல் எடை அதிகரிக்கும். அத்துடன் எரிச்சல், பதற்றம் ஏற்படுவது இதன் முக்கியமான அறிகுறிகளாகும்.

தாழம்பூ சாறு குடிப்பது நன்மை தரும்

தைராய்டைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தாழம்பூ சாறு ஒரு அற்புத பாணமாக்கும். இந்த சாறு தைராய்டை கட்டுப்படுத்த உதவுகிறது என்று நம்பப்படுகிறது. இந்த ஜூஸ் செய்ய, இரண்டு கப் தாழம்பூ இலைகள் மற்றும் 2 ஆப்பிள்களை நன்கு கழுவி, அவற்றை வெட்டவும். இந்த இரண்டையும் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். முடிந்தால், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு இதனுடன் கலந்து குடிக்கவும். இதை உட்கொள்வதன் மூலம் உங்கள் எடையும் குறையும் என்று கூறப்படுகிறது.

பீட்ரூட் மற்றும் கேரட் சாறு கூட நன்மை பயக்கும்

இது தவிர, பீட்ரூட் மற்றும் கேரட் சாறு உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த இரண்டு சாறுகளும் தைராய்டுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது. இதை குடிப்பதால் உடலில் ரத்தம் அதிகரித்து இரும்புச்சத்து குறைபாடு பூர்த்தியாகும்.

No comments:

Post a Comment