JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, June 29, 2022

இன்ஜி., கவுன்சிலிங் பதிவுஒரு லட்சத்தை தாண்டியது

தமிழக இன்ஜினியரிங் சேர்க்கை கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, அரசின் சார்பில், 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இம்மாதம், 20ம் தேதி துவங்கியது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான நாள் முதல், மாணவர்கள் படிப்படியாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர்.

நேற்று மாலை நிலவரப்படி, விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.அதாவது, ஒரு லட்சத்து 1,916 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர்; 59 ஆயிரம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர்; 31 ஆயிரம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என, கவுன்சிலிங் குழு தெரிவித்து உள்ளது. கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க, ஜூலை 19 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment