புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை உடனுக்குடன் EMIS ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Wednesday, June 29, 2022

புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை உடனுக்குடன் EMIS ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் ஏற்கனவே கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் ( EMIS ) பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது பள்ளிக்கல்வித் துறையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை அனைத்து மாவட்டங்களிலும் அரசு / அரசு உதவி பெறும் / பிறவகை பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் 1 ஆம் வகுப்பில் புதியதாக சேரும் மாணவர்கள் மற்றும் ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் 6 , 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மற்றும் பிற வகுப்புகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் சேர்க்கப்பட்ட விவரங்கள் Common Pool- லிருந்து எடுத்து உரிய பள்ளியில் பதிவுகளை கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் ( EMIS ) செய்யப்பட வேண்டும்.

அனைத்துவகை பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பதிவு விவரங்கள் கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் ( EMIS ) பதிவு செய்தால் மட்டுமே துல்லியமாக மாணவர்கள் எண்ணிக்கை விவரம் அறிய இயலும் என்பதால் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களையும் தங்கள் பள்ளி சார்ந்த விவரங்களை EMIS- ல் பதிவு செய்ய அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad