JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் TANCET தேர்வு முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியாகின்றது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பொறியியல், மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்துகிறது.
அதன்படி இந்த ஆண்டு MBA, MCA, M.E, M.Tech, M.Plan, M.Arch., படிப்புகளில் சேர TANCET நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. 2022 டான்செட் நுழைவுத் தேர்வு இந்த வருடம் மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வினை இந்த ஆண்டு 36,710 பேர் எழுதினர். இத்தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டிலுள்ள இக்கல்விகளுக்கான படிப்புகளைக் கொண்ட எந்தக் கல்லூரிகளிலும் சேர முடியும்.
இந்நிலையில் எழுதிய TANCET தேர்வு முடிவுகள் நாளை https://tancet.annauniv.edu/tancet இணையதளத்தில் வெளியாகின்றது.
இதற்கான மதிப்பெண் சான்றிதழை நாளை மறுநாள் முதல் வரும் 30-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment