JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., B.Arch., M.E., M.Tech., M. Arch., MCA, MBA., பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக செமஸ்டர் தேர்வுகளை, ஆன்லைன் மற்றும் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் (Take home) முறையில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது.
ஆனால், இந்த ஆண்டு நேரடி முறையில் தேர்வுகள் நடைபெறும் என்று முன்னதாகவே தெரிவித்திருந்தது.
தற்போது B.E., B.Tech., B.Arch., படிப்புகளில் 2, 4, 6, 8-வது செமஸ்டரில் பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜூன் 18-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வும், ஜூன் 28-ஆம் தேதி முதல் செமஸ்டர் எழுத்துத் தேர்வும் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் M.E., M.Tech., MCA, MBA படிப்புகளில் பயிலும் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் செப்டம்பர் 5, 6 தேதிகளில் நடைபெறும் என்றும், 2, 4-ஆம் செமஸ்டரில் பயிலும் M.Arch., மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஜூலை 18-ல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,ஒருங்கிணைந்த ( Integrated ) M.Arch., M.Sc., MBA படிப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் ஆகஸ்ட் 4, 5 தேதிகளில் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment